பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்வதற்காக ‘நைசர்’ ரேடார் அடுத்தாண்டில் செலுத்தப்பட உள்ளது.

0
169

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ இணைந்து, விண்வெளி பயணத்தை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளன. இதன்படி, நைசர் எனப்படும் நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடாரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கியுள்ள செயற்கை துளை ரேடார், விண்வெளியில் இருந்து பூமியை ஆய்வு செய்யும். பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுவது, கடலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை ஆய்வு செய்யப்பட உள்ளன. மேகங்கள் மறைத்தாலும், இருளாக இருந்தாலும், பூமியை இந்த ரேடார் வாயிலாக துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இஸ்ரோவின், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ரேடார் அனுப்பப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்து, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here