சீன நிதி பெற்றுள்ள நியூஸ் கிளிக்

0
189

2021 ஆம் ஆண்டு நியூஸ் கிளிக் செய்தித் தளம் சீனாவிடம் இருந்து நிதி உதவி பெற்றுவருவதை அறிந்த அமலாக்கத் துறை விசாரணை செய்தது. அப்போது வழக்கம் போல் அனைத்து இடது சாரி, செல்யூலர் & போராட்ட ஜீவிகளான தெரு நாய்களும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக தொண்டை கிழிய குரைத்தன. 2 வருடங்கள் கழித்து தற்போது இடது சாரிகள் விரும்பும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழே சீனா தான் நியூஸ் கிளிக் தளத் திற்கு நிதி உதவி செய்து வருகிறது என்ற உண்மையைப் போட்டு உடைத்துள்ளது. சீனா பரப்பும் புளுகு மூட்டைகளை இங்கு அவிழ்த்து விடவேண்டும். அதற்காகத் தான் நிதி உதவியா! சீனாவில் இருந்து பெற்ற நிதியை நியூஸ் கிளிக் என்ன செய்தது?
* பாரத தடுப்பு ஊசிக்கு எதிராக பிரச்சாரம்:
* பாரதத் தயாரிப்புகளுக்கு எதிராக அவதூறு ப்ரச்சாரம்:
* ப்ரதமரின் பி.எம். கேர்க்கு எதிராக பொய்ப் ப்ரச்சாரம்:
* ரஃபேல் விமானத்திற்கு எதிரான கட்டுக் கதைகளை பரப்பியது:
* ராமர் கோயிலுக்கு எதிராக
* குடியுரிமை சட்டத்தை (CAA) எதிரத்து.
* புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எதிர்த்து
* சீன ஆப்களை தடை செய்ததை எதிர்த்து
* இம்மாதிரியான த்ரோகத்தனம் இன்னும் ஏராளம் உள்ளன.
நியூஸ் கிளிக் மேற்கண்ட மாதிரி கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதற்காக ₹ 45 கோடியை கையூட்டாகப் பெற்றுள்ளது. நியூஸ் கிளிக் ட்வீட்டர் அக்கவுண்ட் வைத்திருக்கிறது. அதில் மத்திய அரசுக்கு எதிராக டுவீட் செய்வதற்கு ஆட்களை நியமித்துள்ளது. ட்வீட் ஒன்றுக்கு ₹300 தருகிறது.மோசடிப் பேர்வழி டீஸ்டா செதல்வாட் நியூஸ் கிளிக் வழியாக சீனக் கையூட் டைப் பெற்றுள்ளார்.டீஸ்டாவின் கணவரான ஜாவேத் ஆனந்த் ₹ 12.61 லட்சம் கையூட்டு பெற்றுள்ளார். டீஸ்டாவின் மகள் தாமரா ₹ 10.93 லட்சம் பெற்றுள்ளார். மகன் ஜிப்ரானும் பெற்றுள்ளார். நியூஸ் கிளிக்கை ஆதரித்தவர்கள்?? சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன் படிக் கையில் கையெழுத்திட்டுள்ள காங்கிரஸ் கட்சி.
புரோக்கர் ரவி நாயர் நியூஸ் கிளிக்கில் ரஃபேல் விமானத்திற்கு எதிராக 2019-22 இல் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள். மேலும் ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு எதிராக 2022இல் ஒரு நூல்வேறு எழுதி வெளியிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றம் ரஃபேல் உடன்படிக் கைக்கு ஆதரவாக 2 தடவை தீர்ப்பளித்தும் கூட தொடர்ந்து பொய்த் தகவல்களைப் பரப்பியது. அப்போது அமலாக்கத்துறை சீனா விடமிருந்து நியூஸ் கிளிக் ₹ 38 கோடி நிதி உதவி பெற்றுள்ளதை வெளிப்படுத்தியது. மோதி அரசு நியூஸ் கிளிக்கிற்கு எதிராக 2 வருடத்திற்கு முன்பே நடவடிக்கை மேற் கொண்டது. இருந்த போதிலும் சீன நிதிஉதவி பெற்று வரும் நியூஸ் கிளிக் தொடர்ந்து இயங்கி வருகிறது.
2 தரப்பிலிருந்து கிடைத்த ஆதரவே அதற்குக் காரணம்.
1) கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூலிக்கு மாரடிக்கும் ஜர்னலிஸ்ட் & எடிட்டர்ஸ் கில்ட்
2) நீதி மன்றம் தொடர்ந்து நியூஸ் கிளிக் கிற்கு அளித்து வந்த சாதகமான தீர்ப்புகள்:
நியூஸ் கிளிக் சீனாவின் பிரச்சார பீரங்கியாக மட்டும் செயல்படவில்லை. பாரததைத் துண்டாட வேண்டுமென நினைக்கும் புளுகு மூட்டைக் கதைகளை அவிழ்த்துவிடும் இடதுசாரிகளுக்கும் பல போராளிகளுக்கும் நிதி கிடைத்து வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here