தென் தமிழ்நாடு கோ சேவா அமைப்பு செய்த இயற்கை விநாயகருக்கு கிடைத்த வரவேற்பு.

0
875

தென் தமிழ்நாடு கோ சேவா அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் நாட்டுப் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருச்சிராப்பள்ளி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நாட்டுப் பசு சாணத்தால் விநாயகர் சிலைகளை தென் தமிழ்நாடு கோ சேவா அமைப்பின் மூலம் விற்கப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கோ சேவா அமைப்பின் பொறுப்பாளர் ஸ்ரீ விசுவநாதன் அவர்கள் கூறியதாவது “இந்த விநாயகர் சிலைகள் நாட்டுப் பசுவின் சாணத்தால் செய்யப்படுகின்றன. சாணத்தை உலர பஞ்சகவியம் அல்லது சில இயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அச்சுவின் மூலம் சிலைகள் வார்க்கப்படுகின்றன. ஹிந்து கலாச்சாரத்தின் படி விநாயகர் சிலைகள் புனிதமானது. நாம் இதை பூஜை செய்தால் நன்மை விளைக்கும்”என்று கூறினார்.

மேலும் “இதை உருவாக்க 15 நிமிடங்கள் போதும் ஆனால் உலர நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகும்”, என்று விளக்கினார்.

இந்த சிலைகள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இதன் தேவைகள் மக்களிடையே அதிகரித்துள்ளன. நாட்டுப் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீபாவளி மற்றும் கார்த்திகை விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப்பொருட்கள், விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இதுபோன்ற 100 பொருட்கள் நாட்டுப் பசுவின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பயிற்சியை எல்லா மாவட்டங்களிலும் கோ சேவா அமைப்பின் மூலம் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் “கோமாதா” ஆன நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. நாட்டுப் பசுவை வளர்க்கும் விவசாயிகள் பெரும் லாபம் அடைகின்றனர். சுற்றுச்சூழலும் பாதுகாப்பு அடையும்.

ஸ்ரீ விஸ்வநாதன் ஜி
அமைப்பாளர், கோ சேவா தென் தமிழகம்
santhivisu.56@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here