வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பாரதத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 2 சிலைகளை அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இங்கிலாந்து இந்தியாவிடம் திருப்பித் தந்துள்ளது . யோகினி சாமுண்டி, யோகினி கோமுகி ஆகிய இரண்டு சிலைகளும் உத்திரப் பிரதேசத்திலுள்ள லோக்ஹரி என்னுமிடத் திலிருந்து 40 வருடங்களுக்கு முன்பு திருட்டுப் போயின. லண்டன் அருங்காட்சியகத்தில் பாதிக்கும் மேற்பட்ட சிலைகள் இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளது. பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு வைக்கப்பட்டுள்ள சிலைகளை திருப்பித் தருமாறு கோரிக்கை வைத்தால் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள 90% சிலைகளைத் தர வேண்டியிருக்கும். பின்னர் அருங்காட்சியகமே வெற்றிடமாகக் காட்சி அளிக்கும். அமெரிக்காவிலிருந்து 307 சிலைகள் மீண்டும் பாரதம் வந்துள்ளன. இதில் பெரும்பாலான சிலைகளை பாரதத்தி லிருந்து பிரபல கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தப்பட்டவை. ஆலயத்துடன், ஆலயத்திலுள்ள தொன்மை யான சிலைகளையும் காப்போம்