முகரம் மற்றும் மத சம்பந்தப்பட்ட விழாக்களின் வாயிலாக ஹிந்துக்களின் மீது ஆக்கிரமிப்பு நடத்த வேண்டாம்_டாக்டர் சுரேந்திர ஜெயின்

0
133

புதுடெல்லி 30ஜூலை 3 2023

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் அவர்கள் பேசுகையில் முகரம் விழாவை ஒட்டி முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்துகின்ற இத் தீவிரவாதமானது தேசம் முழுக்க வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தி சில இடங்களில் காவடிகள் எடுத்துச்செல்பவர்மீது இருக்கிறார்கள். மறுபுறம் கோவில்களில் வலுக்கட்டாயமாக முகரம் கொடி ஏற்றப்படுவதை தடுத்ததன் பொருட்டு கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தில்லியில் நங்காலோயில் காவல்துறை மீது மட்டுமின்றி வீதிகளில், பஸ்களில், கார்களில், ஸ்கூட்டர்களில், மோட்டார் பைக்கில் சென்றவர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிந்துக்கள் மீது உருட்டுகட்டைகளாலும் கற்களாலும் தாக்கியிருக்கின்றனர். இதனால் பல்வேறு வாகனங்கள் சேதத்துக்குள்ளாகின. நூற்றுக்கணக்கான இந்துக்களும் காவல்துறை அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த கொடிய செயலை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

முகரம், ரம்ஜான், ஈத்பெருவிழா, போன்ற முஸ்லிம்களின் விழாக்களோ அல்லது ஹிந்துக்கள் கொண்டாட கூடிய விழாக்களிலோ இது போன்ற ஹிந்து விரோத ஆக்கிரமிப்புகள் கடந்த சில வருடங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு தீவிர தாக்குதல் நடத்துவது போன்று தென்படுகிறது. கலவரக்காரர்கள் சிறு குழந்தைகளை முன்னிறுத்தி இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்கள் பிடிக்கப்பட்டால் கூட சாதாரண தண்டனை அளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியின் அடிப்படையில் தான் இவ்வாறு செய்யப்படுகின்றனர்.

முதலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த சில தலைவர்கள் மற்றும் மௌலவிகள் ஏதேனும் ஒரு காரணத்தினால் வன்முறையில் ஈடுபட்டனர். பிடிக்கப்பட்டவுடன் பெரிய வழக்கறிஞர்கள் படையுடன் நின்று கொள்கின்றனர். இந்த சூழ்ச்சிகளினால் தேசத்தில் வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ஜெயின் தெரிவித்தார்.

முஸ்லிம் சமுதாயத்திற்காக இன்னும் இம்மாதிரி தியாகம் செய்யக்கூடிய முஸ்லிம் இளைஞர்கள் வளர்ச்சிபாதை நோக்கி செல்லாது அழிவின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்துக்கள் எதுவரையில்தான்.

தாக்குதலை சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.

காவல்துறையும் தங்களுடைய நடவடிக்கைகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஹிந்துக்கள் நடத்தும் விழாக்களிலும் மற்றும் ஊர்வலங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் உணர்திறன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு ஊர்வலம் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்பது போல் முஸ்லிம்களின் பண்டிகை ஊர்வலத்திற்கு இது போன்று அளவுகோலை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹிந்துக்கள் தங்களுடைய விழாக்களை அமைதியான வழியில் கொண்டாடுவதற்கான உரிமை இல்லையா? முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகையில் அவர்கள் ஏற்படுத்தும் தாக்குதல் காரணமாக பதட்டமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டுமா? இது போன்ற கேள்விகள் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் .கேவலம் ஓட்டு வங்கிக்காக அவர்களை சுதந்திரமாக சுற்றி திரிவதற்குரிய முயற்சிகளும் உரிமைகளும் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

விஷ்வ ஹிந்து பரிஷத் மதச்சார்பின்மை பேசும் அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் தங்களுடைய எண்ணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

அவர்கள் எம்மாதிரிப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைக்கின்றனர்? விழாக்களின் போது சமுதாய பிரிவினை ஏற்படுத்த வேண்டாம். விழாக்கள் அனைவரும் இணைந்தே கொண்டாட வேண்டும். இதுபோன்ற பிரிவினைவாத எண்ணங்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மனநிலையை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்றுவதோடு மட்டுமின்றி இதுபோன்ற சுயநலத்தில் ஈடுபடக்கூடிய அரசியல்வாதிகளுக்கும் மௌலவிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வினோத் பன்சல்

விஷ்வ ஹிந்து பரிஷத்

தேசிய செய்தித் தொடர்பாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here