பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பங்கஜ் அத்வானி தொடர்ந்து 26 வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார்

0
238

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி. இது அவர் பெற்றுள்ள 26 வது உலக சாம்பியன் பட்டமாகும். 2003 அக்டோபர் 25 அன்று இளைஞர் பங்கஜ் அத்வானி முதல் தடவையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். உலக பில்லியர்ட்ஸ் பட்டம் வென்ற இரண்டாவது நபராகத் திகழ்ந்தார். வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முதலாவது சாம்பியன் பட்டம் பெற்றவர். பங்கஜ் அத்வானி 20 வருடங்களாகத் தொடர்ந்து பில்லியர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்று பாரதத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார். 20 வருடங்களாக இவ்விளையாட்டில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் பெற்று வருவது என்பது எளிதான ஒன்றல்ல. பில்லியர்ட்ஸ் இல் வெற்றி வீரராக ஒளி வீசி வரும் பங்கஜ் அத்வானியைப் பாராட்டுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here