தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலித்த சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம்

0
250

மாவ் என்னும் கிராமத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்) 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சட்டவரைவுக்குழு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இயற்கை எய்தினார் அம்பேத்கர். இன்னும் அம்பேத்கரின் நினைவை அப்படியே சுமந்து நிற்கும் இடங்களாக தீக்‌ஷா பூமி (இறுதிக்காலத்தில் புத்த மதத்தை தழுவிய இடம் , நாக்பூர், மகாராஷ்டிரா ) போன்றவை அப்படியே இருக்கின்றன. அரசியல் சாசனத்தின் முகப்புரை எழுதப்பட்டதன் நோக்கம் குலையாமல் நடந்துகொள்வோம் என்ற தனிமனித உறுதியே, அம்பேத்கரின் நினைவு தினத்தில் ஒவ்வொரு இந்திய குடிநபரும் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை. இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here