சியாச்சினில் முதல் முறையாக ராணுவ பெண் மருத்துவர்

0
255

சியாச்சின் ராணுவத்தின் மருத்துவ பிரிவில் மருத்துவராக தேர்வானவர் கேப்டன் கீதிகா கவுல். இவர் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைப் பகுதியில் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து இவர் ராணுவத்தின் பனி சிறுத்தை படைப்பிரிவில் (ஸ்னோ லியோபர்ட் பிரிகேட்) சேர்ந்து சியாச்சினில் பணியாற்றுவதற்கான பிரத்யேக பயிற்சியை சியாச்சின் போர்க்கள பள்ளியில் பெற்றார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான பயிற்சிகளை அவர் திறம்பட முடித்தார்.

இதையடுத்து அவர் சியாச்சின் பனிமலைப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here