தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பு:
5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகள் அளித்தாலும், பெரும்பான்மையான நீதிபதிகள் அரசின் நடவடிக்கை ஆதரவாகவும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.
மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாக தான் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. ஜனாதிபதி ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது.
அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்தாண்டு (2024) செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம். தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.