பாரதம் உலகின் குருவாக… -RSS தலைவர் மோகன் பகவத்

0
21204

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தால் தான் நாடு காப்பாற்றப்பட்டது என்று வரலாற்றில் எழுதுவதைவிட, இந்த நாட்டில் ஒரு தலைமுறை பிறந்து, தொழில் முனைவோராகத் திகழ்ந்து, தங்கள் நாட்டை உலகிற்கே ஒட்டுமொத்த குருவாக ஆக்கினார்கள் என்று எழுதுவதைப் பார்க்க விரும்புகிறோம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் சரஸ்வதி குஞ்ச் என்ற பகுதியில் அறிவுசார் பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்க தலைவர் டாக்டர் மோகன் பகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்த நாட்டில், முழு சமூகத்தையும் ஒழுங்கமைக்க ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் விரும்புகிறது. இங்கு யாரும் அந்நியர் இல்லை. இன்று நம்மை எதிர்ப்பவர்களும் கூட நமது சொந்தங்களே. இவர்களின் எதிர்ப்பால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் அனைவரையும் இணைக்க முயற்சி செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அனைவரையும் திறந்த மனதோடு அழைக்கிறது.

சமூக மாற்றத்திற்காக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தில் நல்ல பல பணிகளைச் செய்து வருகின்றனர். அதுபோலவே, அறிவுசார்ந்த நீங்கள் அனைவரும் அந்த புனிதப் பணிகளுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

இந்த தேசத்தைப் புரிந்து கொண்டு, நாட்டை முழுவதுமாக ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஈடுபட்டு வருகிறது.

இந்த தேசத்தைப் பெருமை மிக்கதாக மாற்றவும், சமூக மாற்றத்திலும், தேசியப் பணியிலும் அனைவரும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும். நீங்கள் செய்ய விரும்பும் வேலையை உங்கள் சொந்த வழியிலே செய்யலாம்.

இன்னும் சொல்லப்போனால், ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கத்தால்தான் நாடு காப்பாற்றப்பட்டது என்று வரலாற்றில் எழுதுவதைவிட, இந்த நாட்டில் இப்படி ஒரு தலைமுறை பிறந்து, தொழில் முனைவோராகத் திகழ்ந்து,

தங்கள் நாட்டை ஒட்டுமொத்த குருவாக ஆக்கினார்கள் என்று எழுதுவதைப் பார்க்க விரும்புகிறோம். அந்தப் புனிதக் கடமையைத் தொடங்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தின் ஆற்றல் மிக்க பேச்சு, அங்கிருந்த அனைவரது மனதிலும் மிகவும் ஆழமாகப் பதிந்தது. மேலும், புதிய. உற்சாகத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here