நாடாளுமன்றத்தில் இருவர் புகையை தெளித்த (Gas Spray) அடுத்த நிமிடத்திலேயே தான் நடத்தி வரும் என்.ஜி.ஓ. வின் கூட்டாளியான கொல்கத்தாவில் உள்ளவருக்கு வாட்ஸ் ஆஃப் வீடியோ அனுப்பி சமூக ஊடகங் களில் பரப்பிடவும் என்று சொல்லி உள்ளான்.
லலித் ஜா தலை மறைவாக இருந்து வருகிறான். இவனிடம் தான்
1) அமோல் தனராஜ் ஷிண்டே(25),
2) நீலம் ஆசாத்(42),
3) சாகர் ஷர்மா(26),
4) டி.மனோரஞ்சன் கௌடா(34) ஆகிய நால்வரின் மொபைல் ஃபோன் உள்ளது.
இந்த நான்கு பேரும் குருக்ராமில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் விக்கி சர்மாவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஆறு நபர்கள் மீதும் (Unlawful Activities (Prevention) Act) UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள லலித் ஜாவை பிடித்திட பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியில் இருந்த 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றப் பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கியவர் மைசூரு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரதாப் சிம்ஹா. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனின் தந்தை (தனது தொகுதியைச் சேர்ந்தவர்) கேட்டதால் நுழைவு சீட்டு வழங்கியதாக மக்களவையில் இன்று தெரிவித்தார். அவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.