அசாமில் பிஃப்ரவரி 4 ஆம் தேதி பலதார திருமணங்களுக்குத் தடை விதிக்கும் சட்டம் இயற்றப்படும் என மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். இம்முடிவிற்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு முஸ்லிம் பெண்களிடமிருந்து கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பொது சிவில் சட்டத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். குஜராத், உத்தரா கண்ட் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த உள்ள பொது சிவில் சட்டத்தைப் பார்த்த பிறகு அசாமிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார்