மதுரா ஷாஹி ஈத்கா வளாகத்தை சர்வே செய்திடலாம் என அலஹாபாத் உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.அங்குள்ள மசூதியின் கீழ்ப் பாகத்தில் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த புனித பூமி உள்ளது என ஹிந்துக்கள் தரப்பு வாதமாகும்.
அதற்கு ஆதாரமாக பல வகையான அடையாளங்கள் உள்ளன . அதன் மேற்பரப்பில்தான் ஈத்கா மசூதி எழுப்பப்பட்டுள்ளது என்பதும் காணமுடிகிறது. அது மசூதி அல்ல ஒரு ஹிந்து கோயில் ஆகும். தாமரை வடிவில் தூண்கள் உள்ளன. நாகப் பாம்பின் உருவங்கள் அதில் இருக்கின்றன. கிருஷ்ணர் அவதரித்த இரவில் அவரை பாதுகாத்து சுமந்து வந்தவரின் சின்னங்கள் உள்ளன. மேற்கண்ட ஆதாரங்களை நீதி மன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்துள்ளனர்.