மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டாக்டர். மோஹன் யாதவின் முதல் நடவடிக்கை. மாநிலம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் முறைப் படுத்தப்படாமல் இருந்து வருகிற ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். ஒலி அளவை ஒழுங்கு படுத்தி நடைமுறைப்படுத்திட மாவட்டம் தோறும் பறக்கும் படை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். திறந்த வெளியில் இறைச்சிகள் விற்கப் படுவதும் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.