எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நேற்று ஒத்தி வைக்கப்பட்ட பார்லிமென்ட் இன்று காலை வழக்கம் போல் கூடியது. லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு பதாகை ஏந்தி கோஷம் எழுப்பினர். லோக்சபாவில் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். எம்.பி.,க்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 2 மணிக்கு கூடியதும் அமளி தொடர்ந்ததால், திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் ராஜ்யசபாவும் டிச.,18 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.