பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் – கைப்பற்றிய பி.எஸ்.எப்

0
137

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் நெஸ்டா கிராமம், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர். பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப்படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here