இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோட்டையாக விளங்கிய காஷ்மீர் தற்போது அமைதியின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், தென்னிந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் NIA சோதனை நடத்தியதில் மாணவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் பல்லாரி மாவட்ட PFI மாவட்ட தலைவர் வினோஜ் என்ற சுலைமானை கைது செய்துள்ளனர். மேலும் பேடரஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்த, முகமது முனிருதீன், இன்ஜினியரிங் மாணவர் சையது சமியுல்லா, முஜாமில் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு இந்தியாவில் நாச வேலை செய்ய முயற்சித்துள்ளனர். இவர்களை கைது செய்ததனால் பயங்கரவாத செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் மிகத் தீவிரமாக செயல்பட்டு இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாத் குழுக்களின் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும்.