சேவை பொருட்களை சார்ந்ததல்ல சேவைக்கு நல்ல மனது வேண்டும் – பையாஜி

0
128

ஜோஷி போபால் சேவை என்பது பொருட்களை சார்ந்ததல்ல. சேவைக்கு நல்ல மனது வேண்டும். மனதளவில் தயாராகும் போது பொருட்களை பொருட்படுத்தாமல தனி மனிதன் சேவா காரியத்தில்ஈடுபட முடியும் என ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் புரீ பையாஜி ஜோஷி கூறினார். சேவைகள் வெறுமனே இட்டத்தின் அடிப்படையில் செய்யப்படுவதில்லை. இத மனதின் உள்ளார்ந்த துயரங்களின் அடிப்படையில் செய்யப்படுவது. சேவை புரியவர்கள் தங்களின் சேவா காரியங்கள் “சேவா பரமோர்ஹு” என்ற உணர்வு இருந்தல் வேண்டும். பிதிய சிந்தனை கழ ட்ரஸ்டின் சார்பாக போபால் ரதிர பயனில் ஏற்பாடு செய்யப்பட்டிருற்கு மூன்று நாளைய விளக்க உரையின் கடைசி நாளன்று “சேவா பரமோதர்மஹு” என்ற விஷயத்தில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு பாரதிய விஞ்ஞான கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் போபாவின் இயக்குனர் இரு கோவர்தன் தாஸ் அவர்கள் தலைமை வகித்தார்.

முக்கிய விருந்தினராக பங்கேற்ற திரு பையாஜி ஜோஷி அவர்கள் தனது உரையில் பாரத நாட்டிலன்றி வேறு எங்கும் தர்மம் என்ற சொல் பயன்படுத்துவதில்ளல. நமது கண்ணோட்டத்தில் தர்மம் என்பது மிக உயர்வான விரிந்த ஒரு தத்துவமாகும். இதற்கு இரு பக்கங்கள் உள்ளன சித்தாந்தம் மற்றும் செயல் வடிவங்களி. தர்மத்தை கடைபிடிப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என பகவான் ஸ்ரீ ருெஷ்ணர் பகவத் கீதையின் வாயிலாக இதுபோன்று சேவை என்பது வெறுமனே அல்ல அது நடைமுறையின்பாற்பட்டது. சிந்தனைகள் செயல் வடிவில் வரும் – பொழுது சேவை வெளிப்படுகிறது. சிறந்த கருத்துக்களின் அடிப்படையில் விளக்கம் அளிப்பது வேறு விஷயம் ஆனால் சிறந்த பண்பாட்டின் அடிப்படையில் முழக்கத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை எடுத்தச் செல்வது சாதனையாகும். நாம் சித்தாந்த ரீதியாக துன்பப்பட வேண்டாம் என்று கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் இது நாம் செயல்படுத்த வேண்டும். எந்தவித ஞானங்களும் நடைமுறையில் வரும் போது தான் முழுமை அடையும். மகாபார்த்த்தை மேற்கோள்காட்டி கூறுகையில் துரியோதனை தர்மத்தை அறிந்திருந்தான். ஆனால் அவனுடைய செயங்கள் தர்மத்தை சார்ந்தவை அல்ல. ஆகவே சேவை மற்றும் தர்மத்தை அறிந்து கொள்வது அல்ல மாறாக அவற்றை நடைமுறையில் நாம் செய்யவேண்டும்.

சந்தீஷ்கர் சம்பா மாவட்டத்தில் நடந்த தொழநோயாளிகளின் சேவைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை உதாரணமாக முன் வைத்தார். மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி பேசுகையில் எனக்கு மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நான் அடுத்த பிரவியில் ரொட்டியாக இருக்க வேண்டும். அப்பொழதுதான் மற்றவர்களின் பசியை நான் போக்கி கொள்ள முடியும். மகாத்மா காந்திஜியின் இந்த கருத்து வெறுமனே கருத்தின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல உணர்வுகளின் அடிப்படையில் ஏற்பட்டது. புத்தியின் அடிப்படையில் இல்லாது உணர்வுகளின் அடிப்படையில் சிந்தனை செய்யும்போது சேவை எண்ணம் ஏற்படுகிறது. நாம் உடல் ரீதியாக, மனரீதியாக, மற்றும் நம்முடைய ஆத்ம பலத்தை எதற்காக உபயோகப்படுத்துகிறோம். என்பதை சிந்திக்க வேண்டும். நாம் இவற்றை நமக்காக உபயோகப்படுத்தினால் அது அதர்மம் என்று சொல்லப்படுகிறது. மாறாக நாம் இந்த சக்திகளை மற்றவர்களுக்காக பயன்படுத்துவது தர்மம் ஆகும். ஆகவே நாம் விவேகத்துடன் நன்மை தீமைகளை ஆந்தறியும் எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த விவேக மின்மையால் தான் பல சக்திகள் துருபயோகப்படுத்தப்படுகின்றன.

வேலையை செய் ஆனால் பலனை எதிர்பாராதே என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கிருஷ்ணன் கூறியது தன்னலமற்ற எண்ணத்துடன் செய்யப்படும் கருமத்தை அல்ல. உண்மையில் நம்முடைய ஒவ்வொரு வேலையும் உரிய பலனுடன் செய்ய வேண்டும். அப்பொழுது வேலையின் பலன் கிடைக்கும். ஆனால் இந்த வேலையின் காரணமாக கிடைக்கும் பலன் என்னால் கிடைத்தது என்பது தான் தேவையற்றது. இந்த எண்ணத்துடன் செய்யப்படும் வேலை தான் தன்னலமற்ற எண்ணத்துடன் செய்யப்படும் வேலையாகும். “வைஷ்ணவ ஜெனதோ தேனே ககியே” என்று நர்சி மேத்தா அவர்கள் கூறியதன் பொருள் யார் மற்றவர்களுடைய துயரத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர்களே உண்மையான கடவுளின் பக்தர்கள். யார் ஒருவர் துயரங்களை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களே நாம் ஏற்றுக்கொள்ளகூடிய சாதுக்களாகும் என துக்கராம் மகாராஜ்கூறுகிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதாரண மூடர்களில் கூட இறைவனை காண்கிறார். சுவாமி விவேகானந்தர்நர சேவை நாராயண சேவை என்று கூறுகிறார். ராஜா ரந்தி தேவனின் உதாரணங்களையும் முன் வைத்தார்.

பேராசிரியர் கோவர்தன் தாஸ் அவர்கள் கூறும் பொழுது ஸ்வயம் சேவகர்கள் என்பதன் பொருள் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் தயாராக இருக்கிறார்கள் என்பதே. “சேவா பரமோ தர்மஹ” என்பது பாரதத்தின் மூலமந்திரமாகும். சங்க ஸ்வயம்சேவர்கள் இந்த மந்திரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரிடர்கள் ஏற்படுகிறதோ சங்க ஸ்வயம்சேவர்கள் முன்னின்று சேவை செய்கிறார்கள். கொரோனா காலத்தில் தங்களுடைய உயிர்களையும் பொருட்படுத்தாமல் சங்க ஸ்வயம்சேவர்கள் பல சேவா காரியங்கள் செய்திருந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து கேரளா வரை எதிரான சூழ்நிலைகளை கூட சமாளித்துக் கொண்டு ஸ்வயம்சேவர்கள் சமுதாயத்திற்காக சேவை செய்திருக்கின்றனர். “சேவா பரமோ தர்மஹு” என்பது பாரதத்தின் பரம்பரை குணங்களாகும்.
சாதாரண மனிதர்களை கூட கடவுளாக பார்ப்பதே நமது பண்பாடாகும். இன்றைய இளைஞர்களுக்கு கூட இந்த பண்பாட்டை நாம் உணர்த்த வேண்டும்.

 

இளைஞர்களிடம் மனித சமுதாயத்திற்கு சேவை செய்யும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் கூட முக்கிய பங்களிப்பு செய்ய முடியும்.
தேசிய சிந்தனை கழக டிஸ்டின் சார்பாக ஆரோக்கிய சேத்திரங்களின் சேவைகளுக்காக தாந்த்யாடோபே நகரின் ஸ்ரீ குருவாரா பிரபந்த் சமிதி கௌரவிக்கப்பட்டது. ஸ்ரீகுருதேவ் அவர்களின் 5000 வது ஆண்டை ஒட்டி சமிதியின் சார்பாக டாக்டர் ராஜேந்தர் சிங் அவர்களின் வழிகாட்டுதலுடன் நவம்பர் 1969ல் குருநானக் பொது மருத்துவ மனை ஆரம்பிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் மூலமாக பல்வேறு விதமான சிகிச்சைகளும், சேவைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு டிரஸ்ட் இவர்களை கௌரவித்தது. சமிதியின் தலைவர் ஜூஹிந்தர் பால் அரோடா வெகுமதியை பெற்றுக் கொண்டார்.

புத்தகம்:-

“எனது யாத்திரை 1857 நேரில் பார்த்த நிகழ்வுகள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது
போபால் அர்ச்சனா பதிப்பகத்தார் மராத்தியில் ஸ்ரீ விஷ்ணு பட்ட கோட்சே அவர்கள் எழுதிய *மாஜா பிரவாஸ்” என்ற நூலை எழுத்தாளரும் இலக்கியவாதியுமான திரு ரவீந்திர காலே மொழியாக்கம் செய்திருந்த புத்தகத்தை வெளிட்டனர். அர்ச்சனா பதிப்பகத்தாரின் தலைவர் திரு லாஜ்பத் ஓஜா அறிமுக உரையாற்றினார். 1857 ஆம் நடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் நிலைமையை நேரடியாக பார்த்த சாட்சிகளின் விவரங்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக அமர்தலால் நாகர்ஜி எழுதிய புத்தகத்தில் முன்னரே சில குறிப்புகள் வெளிவந்திருந்தன. ஆனால் அதில் முழு அளவு மொழியாக்கம் நடைபெறவில்லை. நாகர்ஜி சில குறிப்புகளை விட்டிருந்தார். ஆனால் இப்புத்தகத்தில் விஷ்ணு பட்ட எழுதியிருந்த அனைத்து அம்சங்களும் அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here