ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீதா விழா நடைபெற்றது.இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பகவத் கீதையின் மறுமலர்ச்சிக்காக பல ஞானிகளும், மகாத்மாக்களும் உழைத்துள்ளதாக தெரிவித்தார். சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பகவத் கீதையில் உள்ளன, அதன் செய்தி நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாங்கள் இங்கே குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் அமர்ந்திருக்கிறோம். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையின் செய்தியை கொடுத்தார். பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய சில அறிவுஜீவிகள், கீதையின் செய்தியை வெற்றிகரமாக எல்லா இடங்களிலும் பரப்ப முடிந்தால், உலகில் ஒருபோதும் போர் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் லோக்சபா அறையில், தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ நிறுவப்பட்டதாகவும், இது மோடியின் பதவிக்காலத்தின் உயரிய புள்ளிகளில் ஒன்றாகும் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.