தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மகான். காலத்தின் கோலத்தால் இதர மதங்களுக்கு மாறியவர்களை தாய்மதம் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர். இவரது இயற்பெயர் முன்ஷிராம். 1856, பிப். 22 ல், பஞ்சாப் மாகாணம், ஜலந்தர் மாவட்டம், தல்வானில் பிறந்தார். இவர் சட்டக் கல்வியில் தேர்ந்து வழக்கறிஞரானார்.1902 ல் ஹரித்வார் அருகில் காங்க்ரியில், குருகுலம் ஒன்றை அமைத்து, தீண்டாமைக்கு எதிராக ஆவேசமாகக் குரல் கொடுத்தார். 1916 ல் ஆரவல்லியில் குருகுலம் இந்திரபிரஸ்தம் என்ற கல்வி நிறுவனத்தையும் துவங்கினார். இக்கல்வி நிறுவனங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உயர பாடுபட்டார்.ஹிந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் தாய்மதம் திருப்ப, சுத்தி என்கிற இயக்கத்தை சுவாமி சிரத்தானந்தரே முன்னின்று நடத்தினார். தீண்டாமைக்கு எதிராக ஹிந்து ஒற்றுமை என்ற மந்திரத்தைப் பிரயோகித்தார்.இந்த சுத்தி இயக்கம் பல்லாயிரம் பேரை தாய்மதம் திருப்பியது. இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிரத்தானந்தர் மீது கோபம் கொண்டு, கொலை மிரட்டல்கள் விடுத்தனர். ஆனால், சிரத்தானந்தர் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை.இதனால் கோபம் கொண்ட அப்துல் ரசீத் என்னும் முஸ்லிம் வெறியன், 1926, டிச. 23 ல் தில்லியில் சுவாமி சிரத்தானந்தரை அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றான்.
#swamishraddhanand #சான்றோர்தினம்