ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பரிவார் அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்சின் அகில பாரத அளவிலான கார்ய கர்த்தர்களின் பைட்டக் டிசம்பர் 23, 24 ,25-12-2023 ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமாரியில் நடைபெறுகிறது. டிசம்பர் 23 முதல் நாள் காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் திரு சுந்தரம் அகில பாரத ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினரான திரு ஸ்ரீதர் வேம்பு , ஸ்வாவலம்பன் பாரத் அபியான், அவர்கள் தனது உரையில் பாரத நாட்டில் கிராமங்களை மையமாக வைத்து கிராமப் பொருளாதாரம் உருவாக்க வேண்டும் என்றும் நகரங்களில் மட்டும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்னேற்றம் செய்யாது சிறந்த தொழில்நுட்பங்களை கிராமத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவித்து சுதேசி சிந்தனையை அதிகப்படுத்தும் போது பாரதம் வளம் பெறும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு பாகையாஜி, சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் மற்றும் சுதேசி பாலக் அவர்கள் சுதேசி விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் ,நல்ல குடிமக்களின் உணர்வு, ஏழைகளுக்கு உதவுதல் சுதேசி பொருட்களையே பயன்படுத்துதல் சுதேசி எண்ணங்களை கடைப்பிடித்தல் கிராமத்தின் உழைப்பு நகரத்தில் செல்லாமல் கிராமத்திலே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை மையமாக வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர்களான திரு அஸ்வினி மகாஜன் திரு பகவத் பிரசாத், தர்மேந்திர துபே உள்ளிட்ட அகில பாரத அதிகாரிகளும் மற்றும் ஷேத்தர, ப்ராந்த அதிகாரிகள் உட்பட 270 க்கு மேற்பட்ட கார்ய கர்த்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு சத்யநாராயணன், ஷேத்திர சம்யோஜக் மற்றும் குருசாமி உள்ளிட்ட கார்ய கர்த்தர்கள் செய்திருந்தனர்