புதிதாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள அயோத்யா ரயில் நிலையத்தின் பெயர் அயோத்யா தாம் என்று அழைக்கப்படும்.ரயில் நிலையத்தில் ராமாயணம் தொடர் புடைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் மையப் பகுதியில் ஶ்ரீராமர் அரியணையில் வீற்றிருக்கும் ஓவியம் இடம்பெற்றுள்ளது. அயோத்யாவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் பிரதமர் மோதி டிசம்பர் 30 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.