தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை, இந்த ஆண்டு 419 கோடி ரூபாய் மதிப்பிலான 51 கனிம ஆய்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.இதுகுறித்து சுரங்க அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாட்டில் முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் முயற்சியில், அரசாங்கம் 24 முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களுக்கான முதல் ஏல செயல்முறையைத் தொடங்கி இருக்கிறது.பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனாவை திறம்பட செயல்படுத்த மாவட்ட கனிம அறக்கட்டளையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை அமைச்சகம் நெறிப்படுத்தி இருக்கிறது. கனிம ஆய்வு மற்றும் செயலாக்கத்தில் தனியார் துறை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்த ஆண்டு மொத்தம் 358 கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.