பாரத – மியான்மர் எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் சுதந்திரமாக வந்து செல்வதை பாரத அரசு தடை செய்துள்ளது. பாரத – மியான்மர் எல்லை 1643 கிமீ தூரத்திற்கு உள்ளது. இரு நாடுகளின் எல்லையையொட்டி 16 கிமீ தூரத்திற்குள் மலைப்பகுதிகளில் வசித்து வருகிற பழங்குடியினர் எவ்வித விசாவும் இல்லாமல் இரு நாடுகளுக்கும் சென்று வரலாம். எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது இங்கு தேவையில்லை.எல்லையில் வழங்கும் அனுமதி சீட்டு (Border Pass) ஒரு வருடத்திற்கு செல்லு படியாகும். எல்லை தாண்டி வருபவர்கள் இங்கு இரண்டு வாரம் தங்கலாம். எவ்வித ஆவணங்களும் கொடுக்க வேண்டிய தில்லை. மத்திய அரசு தற்போதைக்கு 300 கிமீ தூரத்திற்கு தடுப்பு வேலி அமைத்திட முடிவு செய்துள்ளது. மிகச் சிக்கல் நிறைந்த எல்லைப் பகுதியாகும்.இருநாடுகளுக்கும் எவ்வித விசா இல்லாமல் மக்கள் வந்து செல்வதாலும், சிக்கல் நிறைந்த (Porous Border) எல்லைப் பகுதியாலும் பாதுகாப்புப் படையினர் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சிக்கல் நிறைந்த எல்லைப் பகுதிகள், இரு நாட்டு மக்களும் சுதந்திரமாக வந்து செல்வதால் சட்ட விரோதக் குடியேற்றம், போதைப் பொருட்கள், தங்கக் கடத்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்து வருகிறது.குறைந்த பட்சம் 60,000 பேர் சட்ட விரோதமாக பாரதத்திற்குள் குடியேறி உள்ளனர். அதில் 40,000 பேர் மிசோராமில் குடியேறியுள்ளனர். பாரத – மியான்மர் இடையே சுதந்திரமாக மக்கள் வந்து செல்ல அனுமதிப்பதால் மணிப்பூர் & மிசோராம் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டு வன்முறை இன மோதல்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாகும். மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத் தக்கதாகும்.
Home Breaking News இந்திய – மியன்மர் எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் சுதந்திரமாக வந்து செல்ல தடை