விடுதலைப் போராட்ட வீரர் ரா_கிருஷ்ணசாமிநாயுடு பிறந்த தினம் இன்று

0
435

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது ராமச்சந்திரபுரம் கிராமத்தில் ஜனவரி 5, 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930 – ல் சட்டமறுப்பு இயக்கம், 1940 – ல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 – ல் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார். விடுதலைப் போராட்ட வீரர். அதே சமயம்சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தம தலைவர். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968mமுதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார்.இவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை. மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார். வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக, ஏழை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார். இவர், கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here