மதுரையின் ஜோதி நடனகோபாலநாயகி_சுவாமிகள் பிறந்த தினம்

0
310

நடனகோபாலநாயகி சுவாமிகள் ஜனவரி 9, 1843 ஆம் ஆண்டு பிறந்தார். ”மதுரையின் ஜோதி” என்றும், ”சௌராஷ்ட்ர ஆழ்வார்” என்றும் போற்றப்பட்டவர். இவரது இயற்பெயர் ராமபத்திரன். சுவாமிகள் தமது தாய் மொழியான சௌராஷ்ட்ரத்திலும், தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். தந்தை பெயர் அரங்கய்யர், தாயார் இலட்சுமிபாய். இளம் வயதிலேயே இவரது உள்ளம் இறைவனை பாடியது. கல்வியில் கவனம் செலுத்தாத மகனின் எதிர்கால வாழ்விற்கு தனது தந்தை செய்த முயற்சிகள் வீண் போயிற்று. இதனால் தங்கள் பரம்பரை குலத்தொழிலான நெசவுத் தொழிலில் மனம் செல்லாது, வீட்டைத் துறந்து வெளியேறினார்.வீட்டை விட்டு வெளியேறிய இராமபத்ரன், மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தின் மலை கிரிவலப்பாதையில் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தார். பின்பு திருப்பரங்குன்றத்தை விட்டு பரமக்குடிக்கு சென்றார். அங்கு அட்டாங்க யோகியான நாகலிங்க அடிகளை அடிபணிந்து அவரது சீடரானர். அவரிடமிருந்து அட்டாங்க யோக சித்திகளை எளிதில் கற்று தேர்ந்தார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார். நாகலிங்க அடிகள் குரு இவருக்கு ‘சதானந்த அடிகள்’ என்ற பட்டப்பெயர் வழங்கினார். தமது 71வது வயதில் 1914ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசியன்று மோக்ஷம் அடைந்தார். மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் இவரது சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
#NanagopalanayakiSwamigal #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here