ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை இரு மடங்காக உயர்கிறது.

0
123

மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ல் துவங்கியது. தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தி வரும் இந்த திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி குடும்பங்கள் பெற்று வருகின்றன. திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6.2 கோடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு 79,157 கோடி ரூபாய் சிகிச்சை செலவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக தீவிர நோய்களாக கருதப்படும் புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இலவச சிகிச்சை பெற முடியும். அதாவது 10 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இதன் வாயிலாக பெறமுடியும். இதற்கான அறிவிப்பு வரும் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக இந்த திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை 100 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here