பிராண பிரதிஷ்டா நிகழ்வு பண்பாட்டின் உறைவிடம்

0
300

500 வருட நீண்ட காத்திருப்பதற்குப் பின் பகவான் ஸ்ரீ ராமனுடைய ஜென்ம பூமியில் பிராணப் பிரதிஷ்டை என்ற புனிதச் சடங்குகள் ஆரம்பமாகி இருக்கின்றன . அயோத்தி நகர் மக்களின் உற்சாகங்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக நடந்த போராட்டத்திற்கும் பலிதானத்திற்கும் இன்று தக்க பலன் கிடைத்ததை நேரில் அனுபவித்த அயோத்தி மக்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. அயோத்தியில் கோவில்கள், மாளிகைகள், வீடுகள், கடைகள், என எங்குமே காவிக் கொடிகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இராம நாமமும் வேத மந்திரமும் முழங்காத ஒரு சிறு பகுதி கூட அயோத்தியில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here