அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட ராம் லல்லா

0
211

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி125 கலசங்களில் உள்ள புனித தீர்த்தங்களை கொண்டு குழந்தை ராமர் சிலை சுத்தம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லாவின் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, குழந்தை ராமர் சிலையின் கண்கட்டு அவிழ்க்கப்படும். காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here