எழுநூறு ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

0
301
  1. எழுநூறு ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் !!

டாக்டர் N.கண்ணன் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைகழகத்தின் முன்னாள் வேத-கலாச்சார துறைத் தலைவராக சேவையாற்றியவர். மூன்று வேதங்களில் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவர். பல கல்லூரிகளில் கணித பேராசிரியராக பணியாற்றியவர். பல பட்டப் படிப்புகளை முடித்து, சமஸ்க்ருதத்திலும், சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர். ஆராய்ச்சிகள் பல புரிந்தவர். சாஸ்திரா பல்கலைகழகம் மூலமாக மிகப்பல மாணவர்களுக்கு சமஸ்கிருத பட்டமேற்படிப்பு பாடத்தில் பேராசிரியராக பயிற்சி அளித்தவர்.

இவர் வேதாந்த மகா தேசிகர் படைத்த ‘ரகுவீர கத்யம்’ எனும் புகழ்மிக்க பாடலை ஆராய்ந்த போது, அதனுள் புதைந்திருந்த நுட்பமான செய்திகளை தற்போது வெளிக்கொனர்ந்து இருக்கிறார். அதுதான் அயோத்தியில் ராமர் கோவில் 2024ம் வருடம் கட்டப்படும் என எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே வேதாந்த மகா தேசிகர் சூட்சுமமாக குறிப்பிட்டிருந்த செய்தி.

வேதாந்த மகா தேசிகர் எனும் ஸ்ரீ தேசிகர் ஒரு மகா ஞானி என்பதை கற்றறிந்த வேதாந்திகள், அறிஞர்கள் பலரும் அறிவர். அவருடைய சூட்சுமமான சமஸ்கிருத பாடல்களின் இடையே வேத கணித குறியீடுகளை புதைத்து வைப்பது வழக்கம். இதை ‘கடபயாதி’ என்று அழைப்பர்.

இப்படித்தான் அவர் ரகுவீர கத்யம் பாடலின் யுத்த காண்டத்தில், வேத கணித குறியீடுகள் கொண்ட வரியை பயன்படுத்தி இருந்தார். அதனை விரிவாக்கம் செய்து, சோம வாரத்தில் (திங்கள் கிழமை), மிருகசிரிஷ நட்சத்திரத்தின் அதிபதி தினத்தில், மகர மாதம், விக்கிரம வருடம் 2080, 8 தை மாதம் கலி வருடம் 5124, சாலிவாகன சக வருடம் 1945, கொல்லம் வருடங்கள் முடிந்து 1198, என பல வகையில் தற்போதைய 22 ஜனவரி 2024 ஐ தெளிவாக தேசிகர் குறிப்பிட்டுள்ளதை டாக்டர் N.கண்ணன் அவர்கள் வெளிக்கொணர்ந்து உள்ளார். எத்தனை ஒரு அற்புதமான நிகழ்வு பாருங்கள்.

மரியாதைக்குரிய சங்காராச்சாரியார் சுவாமிகள் சிலர் முன்கூட்டியே அயோத்தி கோவிலை திறப்பதாக அபிப்ராயம் செய்துள்ள இத்தருணத்தில், இவையெல்லாம் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்பதை டாக்டர் N. கண்ணன் அவர்களின் வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.

அனைத்தும் இறை செயல் எனும் போது, சரித்திர நிகழ்வான அயோத்தி கோவிலின் பிராண பிரதிஷ்டையும் முன் கூட்டியே இறைவன் தீர்மானிக்காமல் நடக்குமா ?

தற்போது இந்த ஆராய்ச்சியை பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார் டாக்டர் கண்ணன் அவர்கள். (மிக நுட்பமான இந்த ஆராய்ச்சியின் pdf அடியேனிடம் உள்ளது. உயர் கணிதத்திலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர்களே இதை புரிந்துக் கொள்ள இயலும்)

படத்தில் : வேத கணிதத்தில் பல வெளிப்பாடுகளுக்காக, ‘அபிநவ ஆர்யபட்டா’ எனும் விருதை மந்திராலயா சுவாமிகளிடம் இருந்து பெறும் டாக்டர் N.கண்ணன் அவர்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here