பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருது : திரௌபதி முர்மு 22-ம் தேதி வழங்குகிறார்

0
183

கலை மற்றும் கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சமூக சேவை உட்பட 6 துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது, கலை மற்றும் கலாச்சாரம் (7), துணிச்சல் (1), புத்தாக்கம் (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கிய 18 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாநில அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் விருது பெற்ற குழந்தைகளுடன் உரையாடி வாழ்த்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here