75-வது  குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு

0
287

26-ஆம் தேதி நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.குடியரசு தினத்தன்று, டெல்லி கடமைப்பாதையில் வீரர்கள் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மோட்டார் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளார். வரும் 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது, விமானப்படை வாகனத்தில் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here