பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி, அவர்களுடன் இயல்பாக கலந்துரையாடினார். குழந்தைகள் மேற்கொண்ட சாதனைகளின் காரணமாக அவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டனர். இசை, கலாச்சாரம், சூரிய மின்சக்தி, பேட்மிண்டன், செஸ் போன்ற விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
பிரதமரின் சூர்யோதயா திட்டம் நேற்று தொடங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சூரிய சக்தியைப் பயன்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அவர்களிடம் நினைவு கூர்ந்த பிரதமர், இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பது குறித்தும் குழந்தைகளிடம் பேசினார். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுடன் விவாதித்த பிரதமர், துணிவு தினம் குறித்தும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாரம்பரியத்தை அரசு எவ்வாறு மதிக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.