இந்தியா – பிரான்ஸ் ராணுவ தளவாட தயாரிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் உறுதி அளித்தனர். விண்வெளி, இணைய வெளி, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையவெளி குற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உடன்படிக்கை ஏற்பட்டது. டாடா மற்றும் பிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து, எச் – 125 ரக ஹெலிகாப்டர்களை கூட்டாக இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும், செயற்கைக்கோள் நிலைநிறுத்துவதில், ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ மற்றும் பிரான்சின், ‘ஏரியான்ஸ்பேஸ்’ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதற்கிடையே, பிரான்சின் மிக முக்கிய தனியார் விமான தயாரிப்பு நிறுவனமான தேல்ஸ், தங்கள் பராமரிப்பு, பழுது மற்றும் செயல்பாட்டு மையத்தை புதுடில்லியில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.