பிரதமரிடம் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக மாணவி அம்ரித் மெல், கல்லுாரி படிப்புக்கு பின், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணி வகுப்பில், தேசிய மாணவர் படை ராணுவப்பிரிவில், தமிழகத்தில் இருந்து, 124 தேசிய ராணுவப்படை மாணவ – மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட, கோவையை சேர்ந்த, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மாணவி அம்ரித்மெல், தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி பதக்கம் வழங்கி பாராட்டினார்.