பா.ஜ.க. கேரள மாநில இதர பிற்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஶ்ரீநிவாசன் கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கக் கொலையாளிகள் 15 பேருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கிய மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிபதி வீ ஜீ ஶ்ரீதேவி அவர்களுக்கு ஜிகாதி தீவிர வாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன. நீதித் துறைக்கும் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கும் விடப்பட்டுள்ள மாபெரும் சவாலாகும் இது. இப்போக்கினை முளையிலேயே நசுக்கிட வேண்டும். ஜம்மு & காஷ்மீரை விட ஜிகாதிகளின் தேச விரோத வேலைகள் கேரளாவில் அதிகமாக இருந்து வருகிறது.