இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நடந்துவரும் நிலையில் காசா மீது அதிரடி தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது . நான்கு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன.குறிப்பாக போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அண்மையில் முன்வைத்தனர். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.