உத்ராகண்ட் ஹல்த்வானியில் நிகழ்ந்த வன்செயல்கள், தீ வைப்பு & காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதல் சம்பவங் களுக்குக் காரணமாக இருந்து திட்டம் தீட்டிய அப்துல் மாலிக் தில்லியில் கைது செய்யப்பட்டான். அவன் மீது தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அரசுக்குச் சொந்தமான இடத்தில் சில வருடங்கள் முன்பு அப்துல் மாலிக்கால் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அகற்றப் பட்டது. அதனையொட்டி அப்துல் மாலிக் உள்ளூர் மக்களை தூண்டிவிட்டு காவல் துறையினர் & அரசு அதிகாரிகளைத் தாக்கிடவும் அப்துல் மாலிக் முக்கிய காரணமாக இருந்துள்ளான். அவனுடைய அலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில் கடந்த காலத்தில் யாருடன் தொடர்பு கொண்டுள்ளான் என்பது பற்றியும், தில்லியில் சொந்தமாக ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இருப்பதுவும் தெரிய வந்துள்ளது. ஹல்த்வானியில் வன்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கலவரத்தில் பங்கேற்றவர்களைக் கைது செய்ய வீடு வீடாக சோதனை நடைபெற்று வருகிறது.