உத்திரப் பிரதேச மாநில Special Task Force (STF) இந்திய ஹலால் சங்க நிர்வாகிகள் 4 பேரை மும்பையில் கைது செய்துள்ளனர். ஹலால் சான்றிதழ் பெற வற்புறுத்தி உ.பி.யில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்றிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மும்பையில் உள்ள இந்திய ஹலால் சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் & பொருளார் ஆகியோர் உ.பி.யில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்ற சில பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஹலால் சான்றிதழ் பெற வலியுறுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முதஸ்ஸீர், ஹபீப் யூசுஃப் படேல், அன்வர் கான் & தாஹீர் எனும் 4 மௌலானாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்திரப் பிரதேச அரசு சில மாதங்கள் முன்பு ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது.