பாரத்தை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் : பிரதமர் உறுதி

0
3215

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வணக்கம் மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
“இந்தியர்கள் ஒவ்வொருவரின் திறனிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தனது மூன்றாவது ஆட்சியில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இன்று ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளாக உள்ளது.
முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்தோம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றோம். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here