ஜம்மு & காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கிக் கொண்டிருந்த ராவி நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டு ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி ராவி நதி நீர் பயன்பாடு பாரதத்திற்கு மட்டுமே உரியது. பஞ்சாப் பதான்கோட்டிலுள்ள ஷாஃபூர் கால்வாய்த் திட்டம் பஞ்சாப் & ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவு காரணமாக 45 வருடங்கள் காலதாமதமாக நிறைவேறியுள்ளது. இதனால் ஜம்மு & காஷ்மீரில் உள்ள 32,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகிறது. ரஞ்சித் சாகர் அணையும், ஷாஃபூர் கண்டி கால்வாயும் அமைத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்திட 1979 இல் இரு மாநிலங்களுக்கு இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்பட்டு 45 வருடமாக ராவி நீர் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்தது.
2008 ஆம் ஆண்டு தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டு 2013 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. பஞ்சாப் – ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கு இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2014 இல் வேலைகள் நின்று போனது.மத்திய அரசு 2018 இல் தலையிட்டதனால் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியது. இதுநாள் வரை பழைய லக்கிம்பூர் அணையிலிருந்து ராவி நதி நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. தற்போது ரஞ்சித் சாகர் அணை கட்டி முடிக்கபட்டு மதோபூர் கால்வாயின் வழியாக நீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் ஜம்மு & காஷ்மீர் மாநில விவசாயிகள் பெரும் பலனடைவர். அணையில் உற்பத்தியா கும் நீர் மின்சாரத்தினால் ஜம்மு & காஷ்மீருக்கு 20% கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.நமக்குரிய ராவி நதி நீர் உரிமையை பாகிஸ்தானுக்கு பல வருடங்களாக தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு தேச விரோத செயல் முடிவிற்கு வந்தது. மோதி பிரதமரான பிறகுதான் ஷாபூர் கண்டி கால்வாய்த் திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,150 கன அடி ராவி நதி நீர் ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.