இந்திய கடற்படை 3,132 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு

0
181

இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், 3,132 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்து, போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறார். இன்று நமது இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில், இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் குஜராத் போலீசாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here