தாய்மொழியை ஊக்குவிக்கிறது தேசிய கல்விக் கொள்கை- பிரதமா்

0
230

அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின் 50-ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை புதன்கிழமை காணொலி முறையில் தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நமது மொழிகள் வளா்ச்சி அடையவில்லை.
மக்கள் கல்வி அறிவைப் பெற இயலாத சூழல் இருந்தது. புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்க முயற்சிகளும் குறைவாகவே இருந்தன. தற்போது நவீன தொழில்நுட்ப அறிவின் உதவியுடன் 21-ஆம் நூற்றாண்டில் 4-ஆவது தொழில் புரட்சி, இந்தியாவின் தலைமையில் ஏற்படும்.
கல்வி அறிவையும் நம் சொந்த மொழியிலேயே அளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆகவே தேசிய மொழிபெயா்ப்புத் திட்டம் தொடங்குவது குறித்து விவாதித்து வருகிறோம்.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழியை ஊக்குவித்து வருகிறோம். இந்தியா்கள் அனைவரையும் இணையவசதி மூலம் ஒன்றிணைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
ஒரே இந்தியா, உன்னத இந்தியா திட்டம் வெற்றி பெற உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here