பரத நாட்டிய ஆசிரியர் கே_பி_சிவானந்தம் பிறந்த தினம் இன்று

0
92

கே.பி.சிவானந்தம் மார்ச் 1, 1917 ஆம் ஆண்டு தஞ்சையில் பிறந்தவர். ஒரு கர்நாடக இசை வீணை வாத்திய கலைஞர் மற்றும் பரத நாட்டிய ஆசிரியர்.பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய பரதக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய தஞ்சாவூர் நால்வர் பரம்பரையில் வந்தவர்.தஞ்சாவூர் நால்வர் கங்கை முத்து நட்டுவனாரிடமும், சுப்பாராய நட்டுவனாரிடமும் நாட்டியம் கற்றனர். தமது குருவுக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நவரத்தின மாலை என்ற நாட்டியத்தை வடிவமைத்து மேடையேற்றினர்.இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சங்கீத பூசணம் பட்டம் பெற்றார். அங்கேயே வீ. எஸ். கோமதிசங்கர ஐயரிடமும் தேசமங்கலம் சுப்பிரமணிய ஐயரிடமும் வீணை கற்று, தேர்ச்சி அடைந்தார்.அவரது இசை நடன பின்னணி அவரது வீணை வாசிப்பின் தரத்தை உயர்த்தியது.இவர் கோவையைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். சாரதாவும் ஒரு வீணை இசைக் கலைஞர். இவர்கள் இருவருமாக சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் வீணைக் கச்சேரிகள் செய்துள்ளனர். கே. பி. சிவானந்தம் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி ஆசிரியராகவும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைப் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here