திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது – தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

0
149

கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில் ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொதுவானவை. திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. அய்யா வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here