எண்ணற்ற பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடிபட்டு வந்த ஒரு குற்றவாளி, தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கிரிமினல் பேர்வழி ஷாஜஹான் ஷேக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்காமல் மமதா அரசு இருந்துவருகிறது.சந்தேஷ்காலி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதுடன், குற்றவாளி ஷாஜ ஹான் ஷேக்கையும் மாலை 4.30 க்குள் ஒப்படைக்குமாறு கல்கத்தா உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்துவரும் மமதாவின் அராஜகம் உச்சத்திற்கு சென்று விட்டது. ஷாஜகான் ஷேக்கை கொண்டுவரச் சென்ற சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரம் காத்திருந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பி வந்தனர். மாநில போலீஸ் அதிகாரி உயர் நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்குச் செல்லப் போகிறோம் ஆதலால் ஷாஜ ஹான் ஷேக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 55 நாட்கள் பாதுகாத்து வந்த குற்றவாளி ஷாஜஹான் ஷேக்கிடம் மாதாவின் ரகசியங்கள் அனைத்தும் இருப்பதால் அவரை எப்பாடுபட்டாவது பாதுகாத்திட சட்டவிரோத செயல்கள் அனைத்தையும் மமதா செய்து வருகிறார்.
Home Breaking News ஒரு பயங்கரமான குற்றவாளியை காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் மேற்கு வங்க அரசு.