ஜம்மு காஷ்மீர் சென்றடைந்த பிரதமர் மோடி, காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலை மற்றும் அங்குள்ள கோயில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஸ்ரீநகர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் நின்றவாறு பொதுமக்களுக்கு கைகளை அசைத்து பிரதமர் உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலையையும், அங்குள்ள கோயிலையும் வெகு தொலைவில் அவர் பார்ப்பது போன்ற புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.மகா சிவராத்திரி என அழைக்கப்படும் ஹேரத் போன்ற பண்டிகையின் போது சிறப்பு பூஜை நடைபெறும்.
ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் மலைத்தொடரில் சங்கராச்சாரியார் மலையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பள்ளத்தாக்கு தளத்திலிருந்து 1,000 அடி (300 மீ) உயரத்தில் உள்ளது. கோயில் மற்றும் அதை ஒட்டிய நிலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகும், இது இந்திய தொல்லியல் துறையின் கீழ் மையமாக பாதுகாக்கப்படுகிறது.