நாடெங்கிலும் 7 முக்கிய நகரங்களில் சி.பி.ஐ. சோதனை. நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்கள் பலரை ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தில்லி, சண்டிகர், அம்பாலா, மும்பை, மதுரை, சென்னை & திருவனந்தபுரம் ஆகிய 7 நகரங்களில் விசா பெற்றுத் தரும் நிறுவனங்கள் & ஏஜெண்ட்கள் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஏஜென்ட்கள்தான் நமது நாட்டு இளைஞர்களை ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரஷ்யாவின் சார்பில் போரிட ரஷ்ய-உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர். இதுவரை 35 இளைஞர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளனர். நல்ல வேளை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை ஏமாற்றி ரஷ்ய – உக்ரைன் போரில் சண்டையிட அனுப்பி வைத்துள்ள இந்த நிறுவனங்கள், முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சி.பி.ஐ. நடத்திய சோதனையில் இது வரையில் ₹ 50 லட்சம் ரொக்கம், பல ஆவணங்கள், லேப்டாப் & மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு உரிய நபர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தைச் சார்ந்த இளைஞர் முஹம்மது அஸ்பேண்ட் என்பவரை ரஷியா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தி போர் முனைக்கு அனுப்பி வைத்ததில் அவர் மரணம் அடைந்துள்ளார். அதை நேற்று கண்டு பிடித்துள்ளனர். இதன் பிறகுதான் நாடெங்கிலும் சி.பி.ஐ. சோதனையில் ஈடுபட்டுள்ளது