உ.பி. அரசு சிறப்பு புலன் விசாரணை அமைப்பை (SIT) களை சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிற மதரஸாக்களைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது. சிறப்பு புலன் விசாரனை அமைப்பு (SIT) அளித்துள்ள அறிக்கையில் அங்கீகாரமற்ற மதரஸாக்கள் உ.பி. யில் சுமார் 13,000 செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த மதரஸாக் கள் பாரத – நேபாள எல்லைப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இவைகளுக்குத் தேவைப்படும் நிதி உதவிகள் வளைகுடா நாடுகளில் இருந்தே பெருமளவு கிடைத்து வருகின்றன. அங்கீகாரமற்ற 13,000 மதரஸாக்களை மூடி விடும்படி எஸ்.ஐ.டி. பரிந்துரைத்துள்ளது.