என். ஜி. ராமசாமி 11 மார்ச்சு 1912 தமிழ் நாட்டின் அன்றைய கோவை மாவட்டத்தின் பீளமேட்டில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக விளங்கியவர்.
கோவையின் சரோஜா பஞ்சாலையில் வேலைக்குச் சேர்ந்த ராமசாமி, அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த வல்லுநர் என்று பெயர் பெற்றார். அந்த ஆலையில் ‘மாஸ்டர்’ எனும் தகுதி பெற்றார்.
மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும் சிறந்த பணியாற்றினார். பணியாற்றும்போதே தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு விளங்கினார்.
Home Breaking News கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரக சுதந்திரப் போராட்ட வீரர் என்.ஜி.ராமசாமி பிறந்த தினம் இன்று